/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/72_25.jpg)
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் ஜெய் 'வீரபாண்டியபுரம்' படத்தில்நடித்து முடித்துள்ளார். இதில் ஜெய்க்கு ஜோடியாக மீனாக்ஷி கோவிந்தராஜன் நடிக்க, காளி வெங்கட், பாலா சரவணன் உள்ளிட்ட பலர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லென்டி ஸ்டூடியோநிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் நடிகர் ஜெய் இசையமைத்தும் உள்ளார். பிப்ரவரி 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் சுசீந்திரன், நடிகர் ஜெய் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் இயக்குநர் சுசீந்திரன் நடிகர் அஜித் குறித்து உருக்கமாக பேசியுள்ளார். அதில், "அஜித் சார் நல்லவர், அற்புதமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார். அரசியல் ரொம்ப கஷ்டம், நிம்மதியேஇருக்காது. ஒரு நாள்ட்விட்டரில்அஜித் சார் அரசியலுக்கு வரணும்ன்னு சொன்னேன். ஆனால் அது தப்புன்னு இன்னைக்கு தான் எனக்கு புரியுது. கடவுள் அஜித் சாருக்கு இதேபோல்ரசிகர் பட்டாளமும், நிம்மதியையும் கொடுக்கவேண்டும் " எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)